(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. நல்ல முதலிய பெயரடை அடுத்து வல்லினம் மிகாது
இக்கோப்பில் பெரியக் குளம் என்று உள்ளது. முன்பே பெரிய, சிறிய ,நல்ல. கெட்ட, சிறியன, அல்லன, பெரியன, நல்லன. என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது எனக் கூறியிருந்தேன். அதுபோல் மேலும் சிலவற்றைப் பார்ப்போம்.
பெரிய குளம்; பெரிய குடும்பம்; பெரிய செய்கை; பெரிய திட்டம்;
பெரிய துறை; பெரிய தெரு; பெரிய தொல்லை;
பெரிய பாசனம்; பெரிய புத்தகம்;
சிறிய குடும்பம்; சிறிய குளம்; சிறிய குடிசை; சிறிய செய்கை;
சிறிய திட்டம்; சிறிய துறை; சிறிய தொல்லை
சிறிய பண்ணை சிறிய பதவி; சிறிய பாசனம்;
சிறிய புத்தகம் ; சிறிய தூவல்(சிறிய பேனா);
சிறு குடும்பம்; சிறு பெட்டிக் கடை; சிறு சேமிப்பு; சிறு கடை;
சிறியன சிந்தியாதான் ; சிறியன செய்யற்க;
நல்ல கனவு; நல்ல திட்டம்; நல்ல துறை;
நல்ல பண்ணை; நல்ல பதவி; நல்ல பாசனம்;
நல்ல பார்வை; நல்ல புத்தகம்; நல்ல செய்கை;
நல்ல செயல்; நல்லன தொடரும்; நல்லன செய்க;
கெட்ட செய்கை; கெட்ட செயல்; கெட்ட பயிர்;
கெட்ட கனவு; கெட்ட புத்தகம்; பெரியன பேணுக;
அல்லன களைக;
புதிய சிந்தனை; புதிய செயல்; புதிய தலைமுறை;
கரிய கழுதை; கரிய குதிரை; கரிய பன்றி ;
அரிய சிந்தனை; அரிய செயல்;அரிய பொருள்;
வறிய குடும்பம்;
என்றே ஒற்று மிகாமல் எழுத வேண்டும்.
தமிழிலக்கணத்தின்படி இவ்வாறு பெயரைச் சிறப்பிக்கும் அடையாக வருவதால், நல்ல, பெரிய போன்றவற்றைக் குறிப்புப் பெயரெச்சம் என்று கூறுவர். எனினும் இக்கால மொழியியலார் பெயரடை(Adjective) என்பர் .எனவே, பெயர் அடை அடுத்து வல்லினம் மிகாது எனக் கருத்தில் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment