18 June 2026
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: தொடர்ச்சி)
‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ள மின்னிதழ்
நாளும் வெளிவரும் மின்னிதழ் ஒன்றுக்குப் ‘பக்கா’ பைத்தியம் பிடித்துள்ளது. செய்தியாளர்கள், எதற்கெடுத்தாலும் ‘பக்கா’ என்று அடைமொழி சேர்த்துச் செய்திகளைத் தருகின்றனர்.
‘பக்கா’ என்னும் உருதுச் சொல்லைச் சரியான, பெரிய, திருத்தமான, திருத்தமாக, செம்மையாக எனப் பல பொருள்களில் பயன்படுத்துகின்றனர். இத்தனைத் தமிழ்ச்சொற்களை இடத்திற்கேற்பப் பயன்படுத்துவதை விட்டு விட்டு உருதுச்சொல்லைப் பயன்படுத்தும் பைத்தியப் போக்கு எப்படி வந்தது?
அண்மைய மாதங்களில் ‘பக்கா’ பைத்தியத்துடன் வெளிவந்துள்ள செய்திக் குறிப்புகளைப் பார்ப்போம்.
ஐடிஐ (ITI) முடித்த தம்பிகளுக்குப் பக்கா மத்திய அரசு வேலை
பக்கா தட்டச்சுத் திறன் (Typing Speed) மற்றும் எம்எஸ் ஆபீஸ் நாலெட்ஜ்
பக்கா மாதாந்திரத் தொகுப்பூதியம் (Consolidated Pay)
தங்கச்சிகளுக்குப் பக்கா சான்ஸ்
‘பக்கா’ பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை
பள்ளி திறப்பதற்கு முன் ‘பக்கா’ ஆக்ஷன்!
பக்கா தமிழ் படம் – பக்கா என்னும் பெயரில் வந்துள்ள தமிழ்ப்படத்தையும் இது குறிக்கிறது.
கரூரில் பக்கா பிளான் போட்டு மக்களைக் கொன்றுள்ளனர்
செங்கோட்டையன் சபதம்! – பக்கா ஸ்கெட்ச் பின்னணி!
விஷாலின் ‘ரத்னம்’ ட்ரெய்லர் பக்கா மாஸ்..!
பத்தாயிரம் ‘பட்ஜெட்டில்’ பக்காவான மொபைல்கள்… இதுல உங்க சாய்ஸ் எது?
இஸ்லாமிய கைதிகளோடு ஆர்.எஸ்.எஸ்.கைதிகளும் விடுதலை: ஆளுநரின் பக்கா பிளான்!
POCO M6 PRO: பட்ஜெட்டில் பக்காவான 5G ஸ்மார்ட் போன்!
பக்காவான பத்து விவகாரங்கள்!
பக்கா பிளானுடன் களமிறங்கும் பொன்னியின் செல்வன் 2 படக்குழு!
நேற்று திருமா… நாளை சீமான்… அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராமின் பக்கா ப்ளான்!
ரிஸ்க் தொகுதிகள்- ரிஸ்க் மாநிலம்: பாஜகவின் பக்கா பிளான்!
T20 WorldCup 2022: பாகிஸ்தானின் பக்கா ஸ்கெட்ச்… சொதப்பிய ஓபனர்கள்… துவம்சம் செய்த கிங் கோலி
பாராட்டு வாங்க மட்டும் பக்காவா வாங்க: அப்டேட் குமாரு
பக்கா: நிக்கி கல்ராணி ஒப்பந்தமான பின்னணி!
பக்கா ரசிகர்களை ஈர்க்க ‘பக்கா’ ப்ளான்!
.`பக்கா’ போட்டி!
இணைந்திருக்கும் படம் பக்கா
புதிய கடுமையான ஒழுங்குமுறை விதிகளை (New Punishment Rules 2026) வெளியிட்டுப் பக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜாவா தொழில்நுட்பத்தில் பக்கா அனுபவமும் உள்ள ஐடி வல்லுநர்களிடம்.. … …
பக்கா ‘Hands-on’ பணி அனுபவம் (Relevant IT Experience)
பக்காவான புரோகிராமிங் நாலெட்ஜ் கட்டாயம் பாஸ்.
வொர்க்கிங் ப்ரொபஷனல்ஸ்க்கு இது ஒரு பக்கா சான்ஸ் பாஸ்!**
இப்போதிருந்தே பக்கா ‘Prepare’ பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.
தமிழில் பிற மொழிச்சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து இதனை வெளியிடுவது வேதனையாகத்தான் உள்ளது. எனினும் ஊடகத்தினர் புரியும் கொலைச்செய்திகளை உள்ளவாறே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் செய்திகளை எழுதி வெளியிடத் தெரியவில்லை என்றால் எதற்குத் தமிழ் இதழ் நடத்த வேண்டும்? எதற்குத் தமிழில் எழுதத் தெரியாதவர்களைச் செய்தியாளர்களாக அமர்த்த வேண்டும்.
தமிழைக் கொலை புரியும் மன நலங்குன்றியவர்களை மன நல மருத்துவமனையில் சேர்க்கலாமே! இல்லையேல் இவற்றைப் பார்க்கும் தமிழ்த்தாய்க்குப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டி யுள்ளது.
- வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment